ஏப்ரல் மாதம் கடைசியில் காத்திருக்கும் ஆச்சரியம் ; இவர்களுக்கு அதிர்ஷ்டம் நிச்சயம்
2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடைசி நான்கு நாட்கள் ஜோதிடத்தில் மிகவும் முக்கியமான நாட்களாக பார்க்கப்படுகிறது. திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஏப்ரல் 27, அதிகாலை 12:01 மணிக்கு, புதன் பகவானும் குரு பகவானும் சந்திக்கிறார்கள்.
அன்று இரவு 9 .08 மணிக்கு சுக்கிரன் ரோகிணி நட்சத்திரத்திலும் ,ஏப்ரல் 28 அதிகாலை 1.24 மணிக்கு சூரியன் பரணி நட்சத்திரத்திற்குள் சஞ்சரிக்கிறார்கள்.

அவர்கள் எந்த ராசியினர்
பிறகு ஏப்ரல் 29ஆம் திகதி 11:32 மணிக்கு, சூரியனும் புதனும் இணைய இருக்கிறார்கள். இறுதியாக ஏப்ரல் 30ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 6. 55 மணிக்கு புதன் பகவான் மேஷ ராசிக்குள் நுழைகிறார்.
இதனால் சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டத்தை கொண்டு சேர்க்க போகிறது.
மேஷம்: மேலும் கண்டறிக கிரக ஓரைகள் காவிய தொகுப்புகள் ஆன்லைன் ஜோதிட பயிற்சி மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் அதிக ஆற்றலுடனும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுவார்கள். எதையும் தெளிவாக முடிவெடுக்கக்கூடிய புத்தி கூர்மை கிடைக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றமும் புதிய பொறுப்புகளும் உயரும். ஒரு சிலருக்கு வேலையில் இடமாற்றமும் கிடைக்க வாய்ப்பு உண்டு.
துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மனதில் சமநிலையையும் எதையும் தெளிவாக அனுகக்கூடிய சிந்தனையும் கிடைக்க போகிறது. படைப்பாற்றலில் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள். காதல் உறவுகளில் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும். உங்களுக்கான அங்கீகாரமும் உங்களுக்கான வாய்ப்புகளையும் பெறக்கூடிய காலம் ஆகும்.
ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் பொருளாதாரத்தில் புதிய முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை முறையில் நல்ல முன்னேற்றமும் குடும்பத்தில் உங்களைப் புரிந்து நடந்து கொள்ளக்கூடிய அமைப்பும் உருவாகும். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு முற்றிலும் சாதகமாக அமையக்கூடிய காலம் ஆகும்.
பெண் குளிப்பதை பதிவு செய்து தோழிக்கு அனுப்பிய தமிழர் பகுதி நபருக்கு கொழும்பில் பிறப்பிக்கபட்ட உத்தரவு
தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்க போகிறது. மேலும் குரு பகவான் உடைய செல்வாக்கு இவர்களுக்கு புதிய பாதை பிறக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான முக்கிய ஏற்பாடுகளை செய்து கொள்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய திட்டங்களை நிறைவேற்றுவதில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும்.