யோஷித, டெய்சிக்கு எதிரான வழக்கு பிற்போடல்
யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜூன் மாதம் 10ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கும் 2013 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், ஈட்டிய முறையை வெளிப்படுத்த முடியாத 59 மில்லியன் ரூபாவிற்கும்

அதிக பணத்தை மூன்று தனியார் வங்கிகளில் நிலையான வைப்பு கணக்குகளில் வைப்பிலிட்டதன் மூலம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமிழைத்ததாகக் கூறி, சட்டமா அதிபரால் பிரதிவாதிகளுக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.