காலி முதல் பொத்துவில் வரையான கடற்பரப்பில் பயணிப்போருக்கு எச்சரிக்கை
காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் "அம்பர்" நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையின் படி,

அறிவுறுத்தல்
காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்.
மேலும் இக் கடற்பரப்புகளில் மணிக்கு 50-60 கிலோமீட்டர் (km/h) வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
கற்பிட்டி முதல் கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளின் கடல் அலைகளின் உயரம் சுமார் 2.0 – 2.5 மீற்றர் வரை உயரக்கூடும்.
மேற்கூறப்பட்ட கடற்பரப்புகளில் பயணிக்கும் கடற்படையினரும் மீன்பிடிச் சமூகத்தினரும் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகளை உன்னிப்பாகக் கவனிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.