ஆங்கில திரைப்படத்தில் நடிக்கவுள்ள அஜித்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்குமார் தற்போது ஆங்கில திரைப்படங்களில் நடிப்பதற்கு அஜித்குமார் விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவர் குட் பேட் அக்லி திரைப்படத்தை முடித்துவிட்டு சிற்றூந்து ஓட்டப் பந்தயங்களில் கவனம் செலுத்தி வருகின்றார்.
இனி வருடத்தில் 6 மாதங்கள் நடிப்பிற்கும், 6 மாதங்கள் சிற்றூந்து பந்தயத்திற்கும் செலவிடவும் அஜித்குமார் முடிவு செய்துள்ளார்.
இதற்கமைய அவரது அடுத்த திரைப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் ஆங்கில திரைப்படங்களில் நடிப்பதற்கு அஜித்குமார் விருப்பம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.