இலங்கைக்கு வரவுள்ள இந்தியாவின் பிரபல இளம் நடிகர்!
இந்தியாவின் பிரபல இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா படபிடிப்பிற்காக இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமாகி முன்னணி கதாநாயகனாக விஜய் தேவர்கொண்டா உயர்ந்துள்ளார்.
இவர் தமிழில் நோட்டா படத்தில் நடித்து இருக்கிறார். தற்போது நாக் அஸ்வினின் புராண அறிவியல் கதையான 'கல்கி 2898 ஏடி' திரைப்படத்தில் குறிப்பிடத்தக்க தோற்றத்தில் நடித்துள்ளார்.
தற்போது, விஜய் தேவரகொண்டா தனது 12-வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக 'விடி12' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை 'ஜெர்சி' படத்தை இயக்கிய கவுதம் தின்னனுரி இயக்குகிறார். கதாநாயகியாக பாக்யஸ்ரீ போர்ஸ் நடிப்பதாக கூறப்படுகிறது.
அண்மையில் வைசாக்கில் ஒரு மாத காலமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்துள்ளது.
தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு இலங்கை வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கு படத்தின் முக்கியமான காட்சிகளை படமாக்க உள்ளதாக தெரிகிறது.
அதன்படி, இந்த வாரம் படக்குழுவினர் இலங்கைக்கு புறப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
கதை மற்றும் கதாபாத்திரங்கள் பற்றிய கூடுதல் தகவல்களை அறிய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.