கள்ளக்காதலனை தீவைத்து கொளுத்திய பெண்: அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
மருதங்கேணி பிரதேசத்தில் கள்ளக்காதலனை தீவைத்து கொளுத்திய குற்றச்சாட்டில் கள்ளக்காதலி கைது செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது .
மருதங்கேணி தாளையடி பகுதியில் கடந்த 20ஆம் திகதி வீடொன்று தீப்பிடித்ததில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
பொலிஸாரின் விசாரணையில் சிக்கிய பெண்
தீ விபத்தில் பலத்த காயம் அடைந்ததால், அந்த நபரிடம் இருந்து வாக்குமூலம் பெற முடியவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
மருதங்கேணி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணைகளின் பின்னர் உயிரிழந்தவர், மருதங்கேணி கேணி பகுதியை சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் தீவைத்து கொளுத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெண் 47 வயதுடைய தாளையடி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவித்த மருதங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.