94 வருடங்களின் பின்னர் 9 ஏ சித்தி ; மாணவிக்கு வழங்கப்பட்ட பெரும் மதிப்புள்ள காசோலை
நற்பிட்டிமுனை கமு அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தில் 94 வருடங்களின் பின்னர் 9 ஏ சித்தி பெற்று சாதனை நிலை நாட்டிய முகம்மட் நிஸ்பர் பாத்திமா அனபா என்ற மாணவிக்கு சமூக சேவகர் ஒருவர் 50 ஆயிரம் ரூபா பெறுமதியான காசோலையை வழங்கி கெளரவித்தார்.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லசந்த களு ஆராய்ச்சி முன்னிலையில் இக்காசோலை குறித்த மாணவிக்கு வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த மாணவி அம்பாறை மாவட்டம் கல்மனை மாநகர சபைக்குட்பட்ட நற்பிட்டிமுனை கமு அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று கடந்த 2024ம் ஆண்டில் நடைபெற்ற க.பொ.த (சாதாரணதர) பரீட்சைக்கு தோற்றி 9 ஏ சித்திகளை பெற்றவராவார்.
இந்நிகழ்வில் நற்பிட்டிமுனை அல் - அக்ஸா மத்திய மகா வித்தியாலய அதிபர் எம்.எல்.பதியுதீன் மற்றும் ஆசிரியர்கள் ஊடகவியலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.