இலங்கையில் நீர்வீழ்ச்சியை பார்க்க சென்ற தம்பதினருக்கு நேர்ந்த அசம்பாவிதம்!
மஸ்கெலியா காட்மோர் பிரதான வீதியில் நேற்று (07-01-2023) மாலை டிப்பர் ரக வாகனத்தில் உந்துருயில் பயணித்த தம்பதியர் மோதுண்டு விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்த நிலையில் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
இவர்கள் மாத்தறை பகுதியில் இருந்து மஸ்கெலியா பகுதியில் உள்ள காட்மோர் தோட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சியை பார்க்க சென்ற வேளையில் இவ் விபத்து ஏற்பட்டு உள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார கூறுகின்றனர்.
அவர் மேலும் கூறுகையில்,
மஸ்கெலியா காட்மோர் பிரதான வீதி மிகவும் மேடு பள்ளங்கள் என்பதாலும் குறுகிய வீதி என்பதாலும் அதிக அளவில் வலைவுகள் உள்ளதால் இவ்வாறான விபத்துகள் ஏற்படுகின்றன என்று கூறினார்.