புண்ணியம் தரும் அபரா ஏகாதசி விரதத்தின் வழிபாட்டு முறை
இந்து மத சாஸ்திரங்களின் படி, மற்ற விரதங்களை விட, ஏகாதசி விரதம் மிகவும் புண்ணியம் தரும் விரதம் என சொல்லப்படுகிறது. கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசிக்கு அபரா ஏகாதசி என்று பெயர்.
இந்த நாளில் விஷ்ணுவை வழிபட்டு விரதம் இருப்பார்கள். அபரா ஏகாதசி விரதம் இருந்தால் அனைத்து பாவமும் போய் விடும் என சொல்லப்படுகிறது. கடந்த பிறவியில் செய்த பாவங்களில் இருந்த விடுபட நினைப்பவர்கள் இந்த ஏகாதசி விரதத்தை பக்தியோட இருக்கலாம்.
இந்த விரதம் இருந்தால் நல்ல குணம், சந்தோஷம், செல்வம் அனைத்தும் கிடைக்கும். இந்த வருஷம் அபரா ஏகாதசி மே 22ஆம் திகதி இரவு 08.59 மணிக்கு துவங்கி, மே 23ஆம் திகதி மாலை 06.44 மணிக்கு ஏகாதசி திதி நிறைவடைகிறது. இந்த நாளில் புத ஆதித்ய ராஜ யோகமும் உண்டாகிறது. அதனால் இந்த பூஜைக்கு இன்னும் சக்தி கிடைக்கும்.
வழிபாட்டு முறை
ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, சூரியனுக்கு தண்ணீர் படைக்க வேண்டும். விநாயகரை வணங்கி, பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பிறகு விஷ்ணுவையும், லட்சுமியையும் வணங்க வேண்டும்.
தெற்கு திசை பார்த்து சங்கில் அபிஷேகம் செய்ய வேண்டும். மலர்களால் அலங்கரித்து, வெண்ணெய், சர்க்கரை, இனிப்பு, துளசி இலைகளை படைத்து வழிபட வேண்டும். ஊதுபத்தி, தீபம் ஏற்றி ஆரத்தி எடுக்க வேண்டும்.
"ஓம் நமோ பகவதே வாசுதேவாய" மந்திரத்தை சொல்ல வேண்டும். அன்று நாள் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும்.
முடியாதவர்கள் பழம், பால், ஜூஸ் குடிக்கலாம். மாலையில் ஏகாதசி கதையை படிக்கவோ, கேட்கவோ சொய்ய வேண்டும். அடுத்த நாள் காலையில் விஷ்ணுவை கும்பிட்டு, ஏழைகளுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.