யாழிற்கு வருகை தரும் ஐ.நா அதிகாரி! இடம்பெறவுள்ள முக்கிய கலந்துரையாடல்
இன்றைய தினம் (16-08-2022) ஐ.நாவின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO) ஆசிய - பசிபிக் பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லன்-கார் இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
டேவிட் மெக்லாக்லன்-கார் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அரசாங்க, எதிர்க்கட்சி, குடியியல் சமூகம், இராஜதந்திர சமூகம் மற்றும் பிறரை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள அரச மற்றும் குடியியல் சமூக குழுக்களை சந்திப்பார்.
உள்ள அதிகாரிகளுடனான அவரது கலந்துரையாடல் ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி ஒத்துழைப்பு கட்டமைப்பு தொடர்பில் அமைந்திருக்கும்.
அத்துடன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலங்கையில் உள்ள அனைத்து ஐக்கிய நாடுகள் முகவர் நிறுவனங்களின் பணிகளையும் வழிநடத்தும் வகையில் அமைந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.