காரில் கஞ்சா கடத்திய கில்லாடி நபர்
காரில் கேரள கஞ்சாவை கடத்திய சந்தேக நபர் ஒருவர் கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் நேற்று (11) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கார் ஒக்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரத்மலானை பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடையவர் ஆவர். ைதன்போது சந்தேக நபரிடமிருந்து 06 கிலோ 770 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.