பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் இலங்கை அரசியல் சூடு ; ராஜபக்ச குடும்பத்திற்கு ஓக்ஸ்போர்டில் தடுப்பு

Mahinda Rajapaksa Namal Rajapaksa LTTE Leader Tamil
By Sahana Feb 23, 2026 12:17 AM GMT
Report

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) உடன் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பேச்சு நிகழ்வை ஒக்ஸ்போட் யூனியன் Oxford Union ரத்து செய்துள்ளது.

இதற்கு முன்னதாகவே Cambridge Union அவரின் வருகையை ரத்து செய்திருந்தது.

அக்குரேகொட இரட்டைக் கொலை சம்பவம் ; கைதான ராணுவ அதிகாரியின் திடுக்கிடும் தகவல்

அக்குரேகொட இரட்டைக் கொலை சம்பவம் ; கைதான ராணுவ அதிகாரியின் திடுக்கிடும் தகவல்

2026.02.23 அன்று கேம்பிரிட்ஜிலும், பின்னர் ஆக்ஸ்போர்டு யூனியனிலும் உரையாற்ற ராஜபக்ச திட்டமிடப்பட்டிருந்தார். எனினும், பிரிட்டனில் உள்ள பல தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் புலம்பெயர் தமிழ் குழுக்களின் கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) அவர்களின் மகனான நாமல் ராஜபக்ச, 2009 ஆம் ஆண்டு முடிவடைந்த இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் இலங்கை அரசியல் சூடு ; ராஜபக்ச குடும்பத்திற்கு ஓக்ஸ்போர்டில் தடுப்பு | Rajapaksa Family Detained In Oxford British Uni

தமிழ் மாணவர் குழுக்கள் வெளியிட்ட அறிக்கைகளில், போரின் இறுதிக்கட்டங்களில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சு, கட்டாய காணாமல் போக்குகள் மற்றும் பாலியல் வன்முறை குறித்த குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டி, ராஜபக்சவிற்கு மேடை வழங்குவது பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவமதிப்பாக அமையும் என தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகள், 26 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போர் 2009 ஆம் ஆண்டு Liberation Tigers of Tamil Eelam (LTTE) தோல்வியுடன் முடிவடைந்த காலப்பகுதியைச் சுட்டிக்காட்டுகின்றன. அந்த காலகட்டத்தில் அரசாங்கப்படைகள் கடுமையான மீறல்கள் செய்ததாக ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

ஆக்ஸ்போர்டு யூனியன் தலைவர் கேத்தரின் யாங் வெளியிட்ட அறிக்கையில், “பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் நேரடியாகக் கேள்வி எழுப்புவதற்கு பாதுகாப்பாக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

மாற்று ஏற்பாடுகள் பரிசீலிக்கப்பட்டாலும், சமமான பங்கேற்பு சாத்தியமில்லாத சூழலில் நிகழ்வை முன்னெடுக்க இயலாது” என்று கூறப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் யூனியனும் “தற்போதைய சூழலில் சமநிலையான மற்றும் வெளிப்படையான விவாதம் நடத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளது.

மேலும், தங்கள் மேடைகள் எந்த பேச்சாளரையும் ஆதரிப்பதற்கானவை அல்ல என்றும் அவை விமர்சனமற்ற தளங்களாக செயல்படாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் இலங்கை அரசியல் சூடு ; ராஜபக்ச குடும்பத்திற்கு ஓக்ஸ்போர்டில் தடுப்பு | Rajapaksa Family Detained In Oxford British Uni

ஆக்ஸ்போர்டு யூனியன், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் அழைப்பை ரத்து செய்தது இதுவே முதல் முறை அல்ல. 2010 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச உரையாற்றவிருந்த நிகழ்வும் பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. அதற்கு முன்னர் 2008 ஆம் ஆண்டிலும் அவரது வருகை தொடர்பாக சர்ச்சைகள் எழுந்திருந்தன.

இந்த ரத்துச் செயற்பாடுகள், கருத்துச் சுதந்திரம் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் உணர்வுகள் ஆகியவற்றுக்கு இடையிலான சமநிலையைப் பற்றிய விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளன. சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் இந்த விவகாரம் தொடர்பாக பரவலான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், இலங்கை உள்நாட்டுப் போர் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொறுப்புக்கூறல் கேள்விகள் சர்வதேச அளவில் தொடர்ந்தும் விவாதப் பொருளாகவே உள்ளன.

பிரித்தானியாவில் அரசியல் அதிர்வு ; நாமல் உரைக்கு எதிராகப் போராட்டம்

பிரித்தானியாவில் அரசியல் அதிர்வு ; நாமல் உரைக்கு எதிராகப் போராட்டம்

16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US