விஜயுடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்ட வீட்டுப் பணிப்பெண் ; ஆசையை நிறைவேற்றிய பிரியங்கா காந்தி
இநத்தியா - டெல்லியில் நேற்று நடைபெற்ற சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் விஜயை, பிரியங்கா காந்தி தனது வீட்டில் கடந்த 22 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் வீட்டுப் பணிப்பெண்ணுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களப் போட்டிப் பரீட்சையில் முறைகேடு? ; நாடாளுமன்றத்தில் அதிர்ச்சிக் குற்றச்சாட்டு
குறித்த பெண்ணுக்கு தமிழக முதலமைச்சர் விஜயுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது நீண்டகால ஆசையாக இருந்துள்ளது.
இதனை அறிந்த பிரியங்கா காந்தி, அந்தப் பெண்ணின் விருப்பத்தை முதலமைச்சர் விஜயிடம் தெரிவித்ததையடுத்து, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

இதன்போது, நீண்டகால ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் குறித்த பெண் விஜயுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வில் தமிழக அமைச்சர்களான என். ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
22 ஆண்டுகளாகத் தனது வீட்டில் பணிபுரியும் பெண்ணின் நீண்ட நாள் ஆசையை பிரியங்கா காந்தி நிறைவேற்றிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.