ரூ.51,500 கோடி நன்கொடை ; வாரன் பஃபெட்டின் பிரம்மாண்ட அறிவிப்பு
உலகின் முன்னணி முதலீட்டாளரும் அமெரிக்கத் தொழிலதிபருமான வாரன் பஃபெட், தனக்குச் சொந்தமான சுமார் 51,500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை நான்கு அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
96 வயதான வாரன் பஃபெட், தனது சொத்துக்களில் ஒரு பகுதியை அறப்பணிகளுக்காக வழங்கும் நோக்கில் இந்த நன்கொடையை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அவர் வழங்கியுள்ள பங்குகள் நான்கு அறக்கட்டளைகளின் ஊடாக சமூக நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு தொண்டு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் செல்வாக்குமிக்க முதலீட்டாளர்களில் ஒருவராகக் கருதப்படும் வாரன் பஃபெட், நீண்டகாலமாகவே தனது செல்வத்தின் பெரும்பகுதியை சமூக நலப் பணிகளுக்காக வழங்கி வருபவர் ஆவார்.
குறிப்பாக, தனது செல்வத்தைப் பெருமளவில் அறப்பணிகளுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், சுமார் 51,500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை நான்கு அறக்கட்டளைகளுக்கு வழங்கியுள்ளமை சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.