யாழ். சிறைச்சாலையில் நோய்வாய்ப்பட்ட கைதி ; வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலதிக தகவல்கள்
திருட்டுக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர், கடந்த 09ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிறைச்சாலையில் இருந்தபோது நோய்வாய்ப்பட்ட அவரை, சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியாகாத நிலையில், உயிரிழப்புக்கான காரணம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.