ஈழத்தில் பிரசித்தி பெற்ற முறிகண்டி பிள்ளையார் தொடர்பில் முறைப்பாடு!
ஈழத்தில் வடபகுதியில் பிரசித்தி பெற்ற முறிகண்டி விநாயகர் ஆலயத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது அனைவரும் அறிந்தது. சிறய ஆலமாக இருந்தாலும் முறிகண்டி பிள்ளையாரின் கீர்த்தி மிகப்பெரியது.
அதுமட்டுமாலாது வீதியால் பயணிக்கும் அனைத்து வாகங்களுன் நின்று முறிகண்டியானை வணங்கிவிட்டு செல்வது காலம் காலமாக கடைப்பிடிக்கப்படும் வழமையாகும்.

முறிகண்டி பிள்ளையாரை வணங்காது யாரும்செல்வதில்லை
இந்த நிலையில் முறிகண்டி ஆலய பொது நிதியின் பங்களிப்புடன் புது குடியிருப்பு பிரதேச செயலகத்தின் ஊடாக சுமார் 80 இலட்சம் ரூபா நிதி செலவழிக்கப்பட்டு பயணிகளின் வசதிக்காக ஆலயத்திற்கு அண்மையில் கழிப்பறை அமைக்கப்பட்டது.
எனினும் அங்கு முறையான கழிவறை பராமரிக்கப்படாமல் பயணிகளுக்கு சுகாதார சீர்கேடான நிலையில் இருப்பது பலரால் விமர்சிக்கப்பட்டு ஆலயத்தில் வசிப்பவர்கள் மீதும் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகின்றது.

இது சம்பந்தமாக ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கு சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தொலைபேசி மூலம் இது பற்றி முறைப்பாடு ஒன்றை தெரிவித்திருந்தார்.
அத்துடன் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி ரஜீவனிடமும் தெரியப்படுத்தினார்.
எனவே புது குடியிருப்பு பிரதேச செயலகம் இதற்கான நடவடிக்கையை மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என முறிகண்டியான் பக்தர்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.