நிமிடத்திற்கு... நிமிடம் அமெரிக்க கடற்படைக்கு ஆபத்தாகும் ஹோர்முஸ் கடற்பரப்பு
ஈரானின் புதிய உச்சத் தலைவராகக் கூறப்படும் முஸ்தபா கமேனி, ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என அறிவித்துள்ளார்.
உலகின் முக்கியமான எண்ணெய் விநியோகப் பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஹோர்முஸ் நீரிணை, மத்திய கிழக்கில் இருந்து உலக சந்தைகளுக்கு எண்ணெய் கடத்தப்படும் முக்கிய கடல் வழித்தடமாகும்.
ஈரானைத் தாக்கும் எதிரிகளின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நீரிணையை தொடர்ந்து மூடிப் பராமரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக கமேனி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கா ஈரானில் உள்ள முக்கிய இலக்குகள் அனைத்தும் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகக் கூறியிருந்தாலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை நோக்கி ஈரான் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பிரித்தானியாவில் வசிக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன், ஈரானின் முக்கிய இராணுவ இலக்குகள் அழிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அந்நாடு இந்த தாக்குதல்களை எங்கிருந்து மேற்கொள்கிறது என்பது குறித்து கேள்விகள் எழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் பல விடயங்களை இந்த காணொளியில் காணலாம்.....