பிரபல பின்னணிப் பாடகி ஜானகி வீட்டில் ஏற்பட்ட துயரம்; பிரபலங்கள் இரங்கல்
இசை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இந்தியத் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா இன்று அதிகாலை காலமானார்.
தனது தாயுடன் ஹைதராபாத்தில் வசித்து வந்த முரளி கிருஷ்ணாவுக்கு இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

திரையுலகப் பிரபலங்கள் இரங்கல்
உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முரளி கிருஷ்ணா தெலுங்குத் திரையுலகில் நடிகராகவும் அறியப்பட்டவர்.
இசை உலகுக்கு ஈடு இணையற்ற பங்களிப்பை வழங்கிய எஸ்.ஜானகியின் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.
"எஸ். ஜானகி அம்மாவின் வாழ்க்கையில் இது மிகப் பெரிய இழப்பு", ஒரு தாய்க்கு மகனை இழப்பது சொல்ல முடியாத வலி" என சமூக வலைத்தளத்தில் பலரும் பதிவிட்டுள்ளனர்.