யானை – மனித மோதலைக் கட்டுப்படுத்த 84 புதிய வாகனங்கள்
நாட்டின் வனஜீவராசி வளங்களைப் பாதுகாப்பதற்கும், யானை - மனித மோதல்களுக்குத் தீர்வு காண்பதற்கும், வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் கள நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதற்கும் 84 நவீன கெப் (Single Cab) வண்டிகள் அந்தத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.
தலையில் 14 தையல்கள் ; உயிருக்கு அச்சுறுத்தல் எனக் கூறும் சத்தரதன தேரர் ; ஜனாதிபதியிடம் அவசரக் கோரிக்கை
சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி மற்றும் சுற்றாடல் பிரதி அமைச்சர் அண்டன் ஜயகொடி ஆகியோரின் தலைமையில் இந்த வாகனங்கள் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்துக்கு ஒரே தடவையில் வழங்கப்பட்ட மிகப்பெரிய வாகனத் தொகுதி இதுவாகும்.
இதனையடுத்து, அந்தத் திணைக்களம் வசமுள்ள மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 294 ஆக உயர்ந்துள்ளது.
திணைக்களத்தின் வாகன விபரம்
தற்போதைய நிலவரப்படி வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் வசம் உள்ள வாகனங்களின் விபரம் வருமாறு:
சிங்கிள் கெப் வாகனங்கள் – 84 டபள்
கெப் வாகனங்கள் – 16
க்ரூ கெப் வாகனங்கள் –3
மோட்டார் சைக்கிள்கள் – 181
டிராக்டர்கள் – 9
ஹேண்ட் டிராக்டர் – 1
புதிய வாகனங்களின் வருகையால் வனஜீவராசிகள் பாதுகாப்பு நடவடிக்கைகள், வனப்பகுதிகளில் கண்காணிப்புப் பணிகள் மற்றும் யானை – மனித மோதல்களைக் கட்டுப்படுத்தும் கள நடவடிக்கைகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது