பஸ் லலித் இற்கு 72 மணி நேரம் தடுப்புக் காவல் உத்தரவு
டுபாயிலிருந்து நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான லலித் கன்னங்கர என்ற "பஸ் லலித்", 72 மணி நேரம் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல், மனிதக்கொலை மற்றும் கொலை முயற்சி, பலத்த காயங்களை ஏற்படுத்துதல், கப்பம் கோருதல் மற்றும் சொத்துக்களுக்குத் தீ வைப்பு உள்ளிட்ட பல கடுமையான குற்றச்சாட்டுகள் பஸ் லலித்க்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ளது.

மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டம்
அதேவேளை துபாயில் கைது செய்யப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும், ‘பஸ் லலித்’ என்றழைக்கப்படும் லலித் கன்னங்கர இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், ஹங்வெல்ல, வட்டரெக்க, மீகொட மற்றும் கலகெதர உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனை முன்னிட்டு, குறித்த பகுதிகளில் பல்வேறு பதாகைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், குறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்த அரசாங்கத்துக்கும் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
அத்துடன், ‘பஸ் லலித்’ என அழைக்கப்படும் லலித் கன்னங்கர, யாசகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து இலட்சக்கணக்கான பணத்தைப் பெற்றதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.