விசேட பொலிஸ் சோதனையில் 704 சந்தேக நபர்கள் கைது
இலங்கை பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் மற்றொரு கட்டம் நேற்று (9) நடைபெற்றது.
இந்த நடவடிக்கைகளின்போது, 25,503 பேர் சோதனை செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் பாவனை
இதில், குற்றங்களில் நேரடியாக ஈடுபட்ட 29 பேர் அடையாளம் காணப்பட்டனர். மேலும், 704 சந்தேக நபர்கள் மற்றும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 203 நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
அத்துடன், மதுபோதையில் வாகனம் செலுத்திய 100 பேர் கைதுசெய்யப்பட்டதுடன், பிற போக்குவரத்து குற்றங்களுக்காக 3,369 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தத் தேடுதல் நடவடிக்கைகள், இலங்கையில் போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்காக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக இலங்கை பொலிஸார், விசேட அதிரடிப்படை, மற்றும் முப்படைகளைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.