யாழில் வங்கிக் கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபா மாயம்; பொலிஸ் விசாரணையில் பகீர் தகவல்கள்!

CID - Sri Lanka Police Sri Lankan Tamils Jaffna Crime Srilankan Tamil News
By Sulokshi Aug 07, 2024 08:54 AM GMT
Sulokshi

Sulokshi

Report

யாழ்ப்பாணத்தில் வங்கிக் கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபாவை கையாடல் செய்த குற்றச்சாட்டில்  பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவ தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

பணத்தை இழந்தவர் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய பெண் உட்பட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும்  தெரியவருகையில், 

யாழில் வங்கிக் கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபா மாயம்; பொலிஸ் விசாரணையில் பகீர் தகவல்கள்! | 65 Lakh Rupees Mishandling In Bank Account Jaffna

வெளிநாட்டு ஆசையால் ஏமாந்த நபர்

வெளிநாட்டுக்கு அனுப்பப்படும் என்று சமூக வலைத்தளத்தில் விளம்பரத்தை பார்த்து யாழ்ப்பாணம், குருநகரைச் சேர்ந்த ஒருவர் அதில் குறிப்பிடப்பட்டிருந்த உள்நாட்டு மற்றும் பிரிட்டன் தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டுள்ளார்.

மறுத்தார் தம்மிக்க; ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ; உத்தியோகபூர்வ அறிவிப்பு

மறுத்தார் தம்மிக்க; ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ; உத்தியோகபூர்வ அறிவிப்பு

அந்தத் தொலைபேசி இலக்கங்களில் பேசியவர்கள், வங்கிக் கணக்கில் ஒரு தொகைப் பணத்தை வைப்பிடவேண்டும் என்றும், சில ஆவணங்களைத் தங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

யாழில் வங்கிக் கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபா மாயம்; பொலிஸ் விசாரணையில் பகீர் தகவல்கள்! | 65 Lakh Rupees Mishandling In Bank Account Jaffna

அவர்களை நம்பி, தனது கடவுச்சீட்டு பிரதிகள், அடையாள அட்டைப் பிரதிகள் உட்பட பல ஆவணங்களை குறிப்பிடப்பட்ட கொழும்பு விலாசம் ஒன்றுக்கு அனுப்பியுள்ளார்.

அதோடு அவர்கள் குறிப்பிட்ட தொகையை தனது வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு, வங்கிச் செயலியில் கணக்குமீதியை ஸ்கீரின் சொட் எடுத்தும் அனுப்பியுள்ளார்.

மட்டக்களப்பில் பயங்கரம்; ஒருவர் கொலை

மட்டக்களப்பில் பயங்கரம்; ஒருவர் கொலை

வங்கி கணக்கை சரிபாத்தவருக்கு அதிர்ச்சி

இந்தநிலையில் கடந்த 27ஆம் திகதி குருநகரைச் சேர்ந்தவரது கைபேசி இலக்கம் செயலிழந்துள்ளது. இதனையடுத்து சிலநாள்களின் பின்னர் வங்கிக்குச் சென்று தனது கணக்கு மீதியைச் சரிபார்த்தபோது, அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அவரது வங்கிக் கணக்கில் இருந்த 65 லட்சம் ரூபாவும் காணாமல் போயிருந்த நிலையில், யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவில் அது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

யாழில் வங்கிக் கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபா மாயம்; பொலிஸ் விசாரணையில் பகீர் தகவல்கள்! | 65 Lakh Rupees Mishandling In Bank Account Jaffna

யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி குணரோஜன் தலைமையிலான பொலிஸ் குழு இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்தது.

அந்த விசாரணைகளின் அடிப்படையில் பெண் ஒருவர் உட்பட இருவர் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. குருநகரைச் சேர்ந்த நபரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களைக் கொண்டும், அவரிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டும் லாவகமான முறையில் வங்கிக் கணக்கில் இருந்த பணம் வேறொரு வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதோடு குருநகரைச் சேர்ந்தவரின் கைபேசி இலக்கத்தைச் செயலிழக்கச் செய்து, அவரிடம் இருந்து பெறப்பட்ட ஆவணங்களைக் கொண்டு ஈ-சிம் ஒன்று சந்தேகநபர்களால் பெறப்பட்டுள்ளது.

யாழில் வங்கிக் கணக்கில் இருந்த 65 இலட்சம் ரூபா மாயம்; பொலிஸ் விசாரணையில் பகீர் தகவல்கள்! | 65 Lakh Rupees Mishandling In Bank Account Jaffna

பெண்ணின் மோசடி அம்பலம்

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணே கைபேசி நிறுவனத்துக்குச் சென்று உரையாடி, அந்த இலக்கத்துக்குரியவர் தற்போது தாய்லாந்தில் உள்ளார் என்று தெரிவித்து, தாய்லாந்து தொலைபேசி இலக்கத்தில் ஒருவரை உரையாட வைத்து ஈ-சிம்மைப் பெற்றுள்ளார்.

அதனால் பணப்பரிமாற்றம் தொடர்பான குறுந்தகவல்கள் உரியவருக்குக் கிடைப்பது தடுக்கப்பட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷவுக்கு வடக்கு கிழக்கு இளைஞர்கள் ஆதரவு !

நாமல் ராஜபக்ஷவுக்கு வடக்கு கிழக்கு இளைஞர்கள் ஆதரவு !

தாம் சேகரித்த ஆவணவங்கள் தகவல்கள் என்பவற்றைக் கொண்டு, குருநகரைச் சேர்ந்தவரின் வங்கிக் கணக்குக்குள் செயலி ஊடாக நுழைந்த சந்தேநபர்கள், தற்போது கைது செய்யப்பட்ட பெண்ணின் வங்கிக் கணக்குக்கே முதலில் பணம் மாற்றப்பட்டுள்ளது.

அதன்பின்னர் மற்றொருவரின் வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த நபர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் ஐ.டி. துறையில் பணியாற்றுபவர் என கூறப்படுகின்றது.

கொழும்பில் தூக்கில் தொங்கிய இளம் ஆசிரியை; நடந்தது என்ன ...விசாரணை தீவிரம்

கொழும்பில் தூக்கில் தொங்கிய இளம் ஆசிரியை; நடந்தது என்ன ...விசாரணை தீவிரம்

கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டு, எதிர்வரும் 20 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US