ஜனாதிபதி செயலக வாகன பழுதுபார்ப்புக்கு ரூ.65 கோடி செலவு
இலங்கை ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்களின் பழுது பார்ப்புக்காக 65கோடி செலவிடப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலதிக விசாரணை
தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கையில் மேலும் தெரியவந்துள்ளதாவது, 53 வாகனங்கள் 10 முதல் 17 முறை வரை திரும்பத் திரும்ப பழுதுபார்க்கப்பட்டுள்ளன.
மொத்தமாக 189 வாகனங்கள், ஒரு மில்லியன் முதல் 40 மில்லியன் ரூபா வரை மதிப்புடையவை, பழுதுபார்க்கப்பட்டுள்ளன.
ஒரு வாகனத்தின் பழுதுபார்ப்பு செலவு ஒரு மில்லியன் முதல் 28 மில்லியன் ரூபா வரை இருந்ததாக அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த அதிகப்படியான செலவு குறித்து பொதுமக்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் தேவைப்படுவதாகவும் கருத்துகள் வெளியாகியுள்ளன.