மத்திய கிழக்கு போர்; இந்தியாவிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் அமெரிக்கா-ஈரான் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக இந்தியாவிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.

புதிய கட்டுப்பாட்டை விதித்த மத்திய அரசு
சிலிண்டர் பதுக்கலை தவிர்க்கவும், கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை தடுக்கவும் மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.
அதன்படி, ஒரு LPG சிலிண்டர் வாங்கிய பிறகு மற்றொரு சிலிண்டர் பெறுவதற்கான கால இடைவெளி 21 நாட்களிலிருந்து 25 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தட்டுப்பாடு நிலவும் சூழலில் விநியோகத்தை சீர்செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், தமிழகத்தில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
தமிழகத்தில் தற்போது எவ்வளவு சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளன மற்றும் தினசரி தேவை எவ்வளவு என்பது குறித்த விரிவான விவரங்களை உடனடியாக தெரிவிக்குமாறு எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வண்ணம் விநியோகத்தை உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.