தாயின் கண் முன் 5 வயது சிறுவன் தலையை துண்டித்த கொடூரன் ; கொலையாளிக்கு சம்பவம் செய்த கிராமவாசிகள்
5 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று மத்தியப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரால் இந்த குற்றச் செயல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது. உந்துருளியில் பிரவேசித்த ஒருவர் வீட்டினுள் சென்று இந்த குற்றச் சம்பவத்தைப் புரிந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாயின் கண் முன் கொலை
குறித்த சிறுவனின் தாயாரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபரை கிராமவாசிகள் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. சந்தேகநபரை கைதுசெய்து சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவரும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபடுவதற்கு முன்னர் அவர் வேறொரு சில்லறை விற்பனை நிலையமொன்றில் திருடுவதற்கு முற்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட அவர் சமீபத்தில் வீட்டில் இருந்து திடீரென காணாமல் போயிருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.