மாணவர்களுக்கு பயனுள்ள சிசு செரிய திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அரசாங்கம் முயற்சி
சிசு செரிய திட்டத்தை மேலும் திறம்படச் செய்வது மற்றும் மாணவர்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் அதை விரிவுபடுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சிசு செரிய பேருந்து சேவை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதுடன், 2025 ஆம் ஆண்டில் சிசு செரிய திட்டத்திற்காக அரசாங்கம் 2200 மில்லியன் ரூபாய் ஒதுக்கியதாகவும், அதில் 500 மில்லியன் ரூபாய் பயன்படுத்தப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும், நாட்டின் போக்குவரத்துத் துறையில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் ஒரே தளத்திற்குக் கொண்டுவரும் வகையில், தேசிய போக்குவரத்து ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தை நிறுவுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.