34 ஆண்டுகால கொலை வழக்கு ; 84 வயது முதியவர் குற்றவாளி எனத் தீர்ப்பு
இந்தியாவின் பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தில், 34 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கு ஒன்றில், 84 வயது முதியவர் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு நீதிமன்றம் கடுமையான சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வைஷாலி மாவட்ட மேலதிக நீதவான் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.

இதன்படி, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட ஜெகதீஷ் ராய், நரேஷ் ராய், நாக்தேவ் ராய் மற்றும் நாகேஸ்வர் ராய் ஆகிய நால்வருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 84 வயதான தீபா ராய் என்ற முதியவருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது வயோதிபம் காரணமாக தற்காலிகப் பிணையும் (Provisional bail) வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன் குற்றவாளிகள் ஐந்து பேருக்கும் தலா 25,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது