பணத்திற்காக 20 வயது இளைஞன் செய்த மோசமான செயல்
திக்வெல்ல புதிய வீதி சந்திப்பில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் அருகில் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் குருந்துஹேன பகுதியைச் சேர்ந்த 60 வயதான கூலித் தொழிலாளி ஆவார்.
பண விவகாரத்தில் வாக்குவாதம்
திக்வெல்ல,வத்தேகம தெற்கு பகுதியைச் சேர்ந்த 20 வயதான நபரே இக் கொலையை செய்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவருக்கும் சந்தேக நபருக்கும் இடையே பண விவகாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததையடுத்து, இந்தக் கத்திக்குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மார்பு மற்றும் கைகளில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக திக்வெல்ல பதிகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபரை கைது செய்ய திக்வெல்ல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.