யாழில் 3 நாட்களில் 14 பேர் கைது
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் 14 பேர் கடந்த மூன்று தினங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்தமை , சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் என குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருட்களை , கசிப்பு ,மணல் அகழ்வு
இதன்போது சந்தேக நபர்களிடம் இருந்து ஐஸ் , கஞ்சா போன்ற போதைப்பொருட்களை , கசிப்பு , சட்டவிரோதமாக அகழப்பட்ட மணல் மற்றும் மணல் அகழ்வுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் அவர்களை ,நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அதேவேளை யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடந்த காலங்களில் சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய பாலித செனவிரட்னா கடந்த சில தினங்களின் முன்பே கடமைகளை பொறுப்பேற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.