இலங்கை கடற்பரப்பில் அத்துமீறியதாக 14 இந்திய மீனவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

Indian fishermen Kilinochchi Mannar Court of Appeal of Sri Lanka
By Sahana Apr 17, 2026 11:18 AM GMT
Report

கிளிநொச்சி, இரணைதீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் 22ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (17) உத்தரவிட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சில் அதிரடி மாற்றம் ; வலுசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் பதவி விலகல்

எரிசக்தி அமைச்சில் அதிரடி மாற்றம் ; வலுசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் பதவி விலகல்

இராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற இந்திய மீனவர்களில் 10 பேர் கடந்த 9ஆம் திகதியும், மேலும் நால்வர் கடந்த 14ஆம் திகதியும் மன்னார் வடக்கு - இரணைதீவு கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறியதாக 14 இந்திய மீனவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல் | 14 Indian Fishermen Remande Trespassing Sri Lankan

அதனையடுத்து, கைது செய்யப்பட்ட மீனவர்கள், கடற்றொழில் திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட உதவிப் பணிப்பாளர் வி. கனிஸ்ரன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, அந்த மீனவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

ஏற்கனவே விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்களது வழக்கு, இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் பொன்னுத்துரை கிருசாந்தன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இந்த 14 மீனவர்களையும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் மீண்டும் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக 21 படகுகளுடன் 145 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதியில் சட்டவிரோத கால்நடை கடத்தல் ; சந்தேக நபர் நீதிமன்றில்

தமிழர் பகுதியில் சட்டவிரோத கால்நடை கடத்தல் ; சந்தேக நபர் நீதிமன்றில்

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US