குளிக்கச் சென்ற 11 வயது இளம் பிக்குவிற்கு நேர்ந்த துயரம்
உடுதும்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கைக்காவல பகுதியில் பாயும் 'ஹீன் கங்கையில் குளிக்கச் சென்ற இளம் பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (13) இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து உடுதும்புர பொலிஸ் நிலையத்திற்குப் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணை
மினுவாங்கொடை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள விகாரையொன்றின் 11 வயதுடைய இளம் பிக்கு ஒருவரே உயிரிழந்துள்ளார்.
உடுதும்பர பகுதியில் நடைபெற்ற தான நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக வருகை தந்திருந்த இப் பிக்கு, ஏனைய சில பிக்குகளுடன் இணைந்து 'ஹீன் கங்கையில் குளிக்கச் கொண்டிருந்த போதே நீரில் மூழ்கியுள்ளார் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் உடுதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.