தமிழர் பகுதியில் ஆயுர்வேத கடையில் நீண்டகாலம் அரங்கேறிய சம்பவம்
அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று வன்னியர் வீதியில் ஆயுர்வேத கடை என்ற போர்வையில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்து வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் நேற்றைய தினம் (13) கைது செய்யப்பட்டுள்ளார்.
விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 9 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா கலந்த லேகியமும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது.

சோதனை நடவடிக்கை
அக்கரைப்பற்று பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலில், அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் இக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.