ராகுவின் ஆசியால் ராஜ வாழ்க்கை வாழ போகும் ராசிகள் இவர்கள் தான்
ஜோதிடத்தில் நிழல் கிரகமாக கருதப்படும் ராகு, ஒரு ராசியில் 18 மாதங்கள் வரை இருப்பதோடு, அடிக்கடி நட்சத்திரத்தையும் மாற்றுவார். தற்போது ராகு கும்ப ராசியிலும், அவிட்டம் நட்சத்திரத்திலும் பயணித்து வருகிறார்.
இந்த நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய். இந்த நட்சத்திரமானது மங்களகரமானதாக கருதப்படுவதோடு, இது செல்வம், செழிப்பு, வெற்றி ஆகியவற்றை குறிக்கிறது. இந்த நட்சத்திரத்தில் ராகு பயணிப்பது சில ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத வளர்ச்சியைத் தரப்போகிறது.

இப்போது அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கும் ராகுவால் ஏப்ரல் 2027 வரை எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மிதுனம்: அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கப் போகும் ராகுவால் மிதுன ராசிக்காரர்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். எந்த ஒரு வேலையை எடுத்தாலும் அதில் மாபெரும் வெற்றியைப் பெறும் வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வந்து சேரும். நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். நீண்ட காலமாக சந்தித்து வந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான வாய்ப்புள்ளது. தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தமிழர் பகுதியில் பாடசாலை சென்று வீடு திரும்பிய ஆசிரியைக்கு காத்திருந்த பேரிடி ; பட்டப்பகலில் பரபரப்பை கிளப்பிய சம்பவம்
கன்னி :அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கப் போகும் ராகுவால் கன்னி ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 2027 வரை சிறப்பாக இருக்கப் போகிறது. நெருங்கிய நண்பர்களுடன் சேர்ந்து ஒரு புதிய முயற்சியைத் தொடங்கும் வாய்ப்புள்ளது. இந்த முயற்சி நல்ல பலனைத் தரும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புத்திசாலித்தனம் மற்றும் கடின உழைப்பால், எவ்வளவு கஷ்டமான வேலைகளையும் எளிதில் முடிக்க முடியும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் புதிய பொறுப்புக்கள் அல்லது பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது.
கும்பம் :அவிட்டம் நட்சத்திரத்தில் இருக்கப் போகும் ராகுவால் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 2027 வரை பொற்காலமாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். உறவுகளைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும். வீட்டு சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் நல்ல பாராட்டுக்களைப் பெறுவார்கள். நீண்ட காலமாக சந்தித்து வந்த ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் திறமைக்கேற்ற நல்ல பலனைப் பெறுவார்கள்.