பொலிஸ் உளவாளியை கொலை செய்ய திட்டம் ; இறுதியில் காத்திருந்த ட்விஸ்ட்
பொலிஸ் தகவலாளர் ஒருவரின் மரணத்தைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர், செல்ல கதிர்காமம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தகவலாளர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், கடந்த ஆண்டு கிரிந்த பகுதியில் 325 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் இந்த விவகாரம் தொடர்புடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் தகவல் வழங்கிய பொலிஸார் தகவலாளரை இலக்கு வைத்து, குறித்த மரணம் தொடர்பாக திட்டம் தீட்டப்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.