பொலிஸ் அதிகாரியின் உயிரை பறித்த கோர விபத்து ; கதறும் உறவுகள்
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி நகரை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அவரது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் பயணித்த லொறியின் வலது பக்கத்தில் பலமாக மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக சிகிச்சை
விபத்தில் கடுமையான காயங்களுக்கு உள்ளான சார்ஜன்ட், அங்கிருந்தவர்களால் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் நேற்றிரவே மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
, விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.