விளக்கமறியலில் இருந்தவர் கொடுத்த தகவலால் வசமாக பிடிபட்ட இருவர்
மஹரகம பகுதியில் கொக்கேய்ன் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள்
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 306 கிராம் கொக்கேய்ன் மற்றும் 210 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் 45 மற்றும் 61 வயதுடைய ருக்மல்கம மற்றும் இரத்மல்கம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.