லாப திருஷ்டி யோகம் ; செல்வத்தை அள்ளிக் கொடுக்க போகும் ராசிக்காரர்கள்
ஜோதிடரீதியாக செப்டம்பர் மாதம் மிகவும் முக்கியமான மாதமாகக் கருதப்படுகிறது. பல்வேறு கிரக மாற்றஙகளால் செப்டம்பர் மாதத்தில் சில சக்திவாய்ந்த ராஜயோகங்கள் உருவாகப்போகின்றன. செப்டம்பர் 1 ஆம் திகதி செவ்வாய் மற்றும் புதன் இணைந்து லாப திருஷ்டி யோகத்தை உருவாக்கப்போகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி இரண்டு கிரகங்கள் ஒன்றுக்கொன்று 60 டிகிரி கோணத்தில் சந்திக்கும் போது லாப திருஷ்டி யோகம் உருவாகிறது.
லாப திருஷ்டி யோகம் சக்திவாய்ந்த பஞ்ச யோகங்களில் ஒன்றாகும். செவ்வாய்-புதன் உருவாக்கும் இந்த யோகத்தின் பலன்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் வெளிப்பட்டாலும் சில ராசிக்காரர்கள் இதனால் கூடுதல் பலன்களை அனுபவிப்பார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று நாம் இங்கு பார்ப்போம்.

மேஷம்
செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் சிறப்பான பலன்களை அனுபவிக்கப்போகிறார்கள். பொருளாதாரரீதியாக இது மிகவும் சிறப்பான காலகட்டமாக இருக்கும், மேலும் கடந்த காலத்தில் தடைப்பட்டிருந்த வேலைகளை இப்போது வெற்றிகரமாக தொடங்கலாம். வேலையில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம்.அந்த பொறுப்புகள் சற்றுச் சவாலாகத் தோன்றினாலும், அவை அவர்களின் திறமையை நிரூபிக்கும் வாய்ப்புகளைக் கொடுக்கும்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் எதிர்பாராத நன்மைகளை அனுபைவிக்கப்போகிறார்கள். இந்த யோகத்தால் சமூகத்தில் அங்கீகாரத்தையும் மரியாதையையும் அடையும் நேரமாக இது இருக்கும். இந்த காலகட்டத்தில் அவர்களின் வாழ்க்கையில் நிலவி வந்த நிதி சிக்கல்கள் முடிவுக்கு வரும். அவர்கள் வாழ்க்கையின் நீண்டகால ஆசைகளில் பல இந்த காலகட்டத்தில் நிறைவேறும். நிதிப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் தேடிவரும். திருமண வாழ்க்கையில் அன்பும் பரஸ்பர பாசமும் அதிகரிக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இது வெற்றிகள் குவியும் காலகட்டமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நிதி நிலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. லாப திருஷ்டி யோகம் உங்களுக்கு நிதி ஸ்திரத்தன்மையை வழங்கக்கூடும், மேலும் உங்கள் சமூக அந்தஸ்தை அதிகரிக்கும். புதிய கார் அல்லது வீடு வாங்குவது பற்றி நீங்கள் யோசித்துக்கொண்டிருந்தால் அதற்கு இதுதான் சரியான காலம்.
