கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் ராசிகள் யார்யார் தெரியுமா?
ஜோதிடரீதியாக மே மாதம் மிகவும் முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. வரப்போகிற மே மாதத்தில் பெரும்பாலான கிரகங்கள் தங்களின் நிலையை மாற்றப்போகின்றன. இந்த கிரக மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தையும், மாற்றங்களையும் ஏற்படுத்தும்.
மே மாதத்தின் தொடக்கத்திலேயே கிரக மாற்றங்கள் நிகழத் தொடங்குகின்றன. மே 1-ஆம் திகதி மேஷ ராசியில் புதன் கிரகம் அஸ்தமனமாகிறது. பின்னர் மே 15-ஆம் திகதி ரிஷப ராசிக்கு நகர்ந்து, மே 26-ஆம் திகதி மீண்டும் உதயமாகிறது.

மே 11-ஆம் திகதி செவ்வாய் கிரகம் மேஷ ராசிக்கு மாறுகிறது. மே 14-ஆம் திகதி சுக்கிரன் மிதுன ராசிக்குள் நுழைகிறார், பின்னர் மே 15-ஆம் திகதி சூரியன் ரிஷப ராசிக்கு மாறுகிறார்.
நான்கு முக்கிய கிரகங்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்வதால், சில ராசிக்காரர்கள் மற்ற ராசிக்காரர்களை விட சாதகமான பலன்களை அடையப்போகிறார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மே மாதத்தில் மேஷ ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பல நேர்மறையான அனுபவங்களைப் பெறுவார்கள். அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக முழு பிரபஞ்சமும் அவர்களுக்கு துணையாக இருக்கும் இருக்கும். மே மாதம் மற்றவர்களை மன்னிக்கவும், அவர்களை நேசிக்கவும் வாய்ப்பு கிடைக்கும். அவர்களின் வாழ்க்கையில் நீண்ட காலம் மகிழ்ச்சியைக் கொடுக்கும் மாற்றங்கள் ஏற்படும். மே மாதத்தில் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும், அவர்களின் திறமை மீது தன்னம்பிக்கை அதிகரிக்கும். அவர்கள் சில புதிய உத்திகளை செயல்படுத்துவதன் மூலம் பெரிய வெற்றியை அடைவார்கள். சமூகத்தில் அவர்களின் நற்பெயரும், அதிகாரமும் அதிகரிக்கும். இது அவர்களுக்கு அதிக பலத்தைத் தரும். மே மாதத்தில் எதிர்பாராத அற்புதங்கள், சில ஆசீர்வாதங்கள் மற்றும் சிறந்த வாய்ப்புகள் அவர்கள் வாழ்க்கையில் வரப்போகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு மே மாதம் அவர்கள் எதிர்பாராத அனுபவங்களையும், அதிர்ஷ்டத்தையும் தரப்போகிறது. இந்த மாதத்தில் மிதுன ராசிக்காரர்கள் புதிய வாகனம் அல்லது சொத்துக்கள் வாங்க வாய்ப்புகள் உருவாகலாம். பொருளாதாரநிலை கடந்த காலத்தை விட மிகவும் சிறப்பாக இருக்கும். அவர்கள் விரும்பும் பல விஷயங்களை அடைய முடியும். உங்களைப் பற்றி பலருக்கு இருந்த தவறான எண்ணங்கள் முடிவுக்கு வரும்.
திருமணமான தமபதிகளிடையே நெருக்கமும், ஒற்றுமையும் அதிகரிக்கும். வீட்டிற்காக சில ஆடம்பர பொருட்களை வாங்கலாம். வேலை தேடுபவர்களுக்கு சிறப்பான வேலை வாய்ப்புகள் கிடைக்கும். புதிய திட்டங்களில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. அலுவலகத்தில் அவர்களின் செயல்திறன் அதிகரிப்பதால், பல்வேறு சாதனைகளும், அங்கீகாரமும் தேடிவரும். குடும்பத்தினரின் முழு ஆதரவும் அவர்களுக்குக் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் மே மாதத்தில் அற்புதமான பலன்களை அனுபவிக்கப் போகிறார்கள். இந்த மாதத்தில் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளை திறம்பட சமாளிக்க முடியும். அவர்கள் சமூகத்தில் மரியாதை மற்றும் அங்கீகாரத்தைப் பெறுவார்கள். அவர்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியைக் கொடுக்கும், மேலும் குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவார்கள். வேலையில் இருப்பவர்கள் அவர்களின் துறையில், பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகளைப் பெறலாம். அவர்கள் தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன, மேலும் அவர்களின் கடின முயற்சிகளுக்கு மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெறுவார்கள். புதிய முயற்சிகளைத் தொடங்க இது சரியான மாதமாக இருக்கும்.