மருத்துவமனை அருகே சுற்றிதிரிந்த இளைஞர்கள் ; சோதனையில் காத்திருந்த அதிர்ச்சி
தங்காலை நகரின் பெலியத்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை அருகே நேற்று (27) இரவு 10 மணியளவில் பொதி செய்யப்பட்ட போதைப் பொருட்களுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
100 கிராம் ஹெரோயின் அடங்கிய இரண்டு பொதிகளுடன் சுற்றித்திரிந்த குறித்த இளைஞர்கள் தங்காலை பொலிஸ் போக்குவரத்து பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப் பொருள் பறிமுதல்
குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் 250,000 ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
19 வயதுடைய குறித்த சந்தேகநபர்கள் வெலிகம, பத்தேகம மற்றும் அஹங்கம, மிதிகம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில் தொழில் புரிபவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்கள் இருவரும் தங்காலை தலைமையக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், தங்காலை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.