காலியில் அதிர்ச்சி சம்பவம்: வெட்டுகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!
காலி - அம்பலாங்கொடை பிரதேசத்தில் நேற்றைய தினம் (13-07-2023) காலை ஆண்ணொருவரின் சடலம் வெட்டு காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அம்பலாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய எஸ்.பி. லசந்த என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்குப் பின்னர் வீட்டிலிருந்து காணாமல்போன நிலையில், நேற்று காலை 6 மணியளவில் வீட்டுக்கு அருகில் உள்ள வெற்றுக்காணியொன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் பொலிஸார் ஒப்படைத்தனர்,
மேலும் இச்சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.