முற்றுகையிடப்பட்ட வீட்டிற்குள் சிக்கிய இளைஞன் ; சோதனையில் சிக்கிய தகவல்
ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 32 வயதுடைய ஒருவரை மத்திய மாகாண குற்றத் தடுப்புப் பிரிவு கைது செய்துள்ளது.
மத்திய மாகாண குற்றத் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய, கடுகன்னாவை, கல்பிங்கே பகுதிக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணை
இதன்போது சந்தேகநபரிடமிருந்து 100 கிராம் ஐஸ் போதைப்பொருளும் 10 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, சந்தேகநபரின் வீட்டிலிருந்து மேலும் 500 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பன்னல பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் எனத் தெரிவிக்கப்படுகிறது.