இலங்கையின் பல பகுதிகளில் திடீர் மின் தடை ; காரணம் வெளியானது
புதிய இணைப்பு : நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகவும், மேல் கொத்மலை மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறே இதற்குக் காரணம் என சந்தேகிக்கப்படுவதாகவும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
மின்விநியோகத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
முதலாம் இணைப்பு : நாட்டின் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில் எவ்வித முன் அறிவிப்புக்களும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் ஏற்பட்ட திடீர் மின்வெட்டு காரணமாக மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு தழுவிய ரீதியில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.