முச்சக்கரவண்டியை திருடிய இளைஞன் கைது
நுவரெலியா-கந்தப்பளை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியை திருடி சென்ற தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்த 18 வயது இளைஞன் ஒருவரை கந்தப்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை (10) இரவு இடம்பெற்ற இந்த கைது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. கந்தப்பளை தேயிலைமலை தோட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனக்கு சொந்தமான முச்சக்கர வண்டியை கந்தப்பளை நகரில் நிறுத்தி விட்டு வீட்டுக்கு கடைக்கு சென்றுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தலவாக்கலை கட்டுக்கலை பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞர் முச்சக்கர வண்டியை திருடி சென்றுள்ளார். பின் தான் நிறுத்திவிட்டு சென்ற முச்சக்கர வண்டியை காணவிலைலை என பதற்றத்திக்குள்ளான முச்சக்கர வண்டி உரிமையாளர் அயலவர்களிடம் விசாரித்துள்ளார்.
இதன்போது முச்சக்கர வண்டியை ஒருவர் மிக வேகமாக நுவரெலியா பகுதியை நோக்கி சற்றுமுன் செலுத்தி சென்றதை அவதானித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின் கந்தப்பளை பொலிஸாரிடம் முறையிட்டதை தொடர்ந்து விரைவாக செயல்பட பொலிஸார் திருடி செல்லப்பட்ட முச்சக்கர வண்டியை பொரலந்தை நகரில் மடக்கி பிடித்ததுடன் முச்சக்கர வண்டியை திருடி சென்ற இளைஞரையும் கைது செய்ததாக சம்பவம் தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வரும் கந்தப்பளை பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இளைஞரை விசாரணையின் பின்னர் நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.