யாழ் மாவட்டம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் ; அதிகரிக்கும் ஆபத்து
யாழ் மாவட்டத்தை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன் துறை பொலிஸ் தலைமை நிலையங்களை உள்ளடக்கிய பகுதிகளில் கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப் பகுதிகளில் 7000 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அது 2024 ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரு மடங்காக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட செயலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தலைமையில் இடம்பெற்ற போதை ஒழிப்பு பிரதேச மட்ட குழுக்களை ஆரம்பிக்கும் நிகழ்விலே குறித்த தகவல் வெளியிடப்பட்டது.

போதைப் பொருள் பாவனை
வெளியிடப்பட்ட தகவலின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டு 7040 பேர் உயிர் கொள்ளிப் போதைப் பொருட்களான ஹெரோயின் ஐஸ் , கஞ்சா மற்றும் குஷ் போதைப் பொருட்களுடன் தொடர்பு பட்ட நபர்களாக காணப்படுகின்றனர்.
யாழ் பொலிஸ் தலைமை நிலையப் பகுதிகளில் கடந்த 2023ஆம் ஆண்டு 2591 பேரும், 2024 ஆம் ஆண்டு 2450 பேரும் 2025ஆம் ஆண்டு 4380 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோன்று காங்கேசன் துறை தலைமை பொலிஸ் நிலையத்தை உள்ளடக்கிய பகுதிகளில் 2023 ஆம் ஆண்டு 1180 பேரும் 2024 ஆம் ஆண்டு 1614 பேரும் 2025 இறுதி வரை 2654 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழர் பகுதியில் இரவில் பெண்கள் விடுதிக்குள் புகுந்த இளைஞன் நையப்புடைப்பு ; அதிர்ச்சி கொடுக்கும் பின்னணி
அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் கடந்த மூன்று வருடங்களில் 14786 பேர் போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் சுமார் 2000 க்கு மேற்பட்டோர் புனர்வாழ்வு அனுப்பி வைக்கப்பட்டனர்.
யாழ் மாவட்டத்தை பொருத்தவரையில் உயிர்கொல்லி போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனைகளுடன் தொடர்புடைய நபர்கள் எண்ணிக்கை அதிகரித்த போக்கையே கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.