இளைஞர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு எரிப்பு; நால்வர் கைது

CID - Sri Lanka Police Crime Murder
By Sulokshi Nov 02, 2026 05:49 AM GMT
Report

வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவரை கொடூரமாகப் படுகொலை செய்து, அவரது உடலை எரித்து, எலும்புத் துண்டுகளைக் களனி ஆற்றில் வீசிய சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி குறித்த இளைஞர் காணாமல்போனமை தொடர்பாக கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியிருந்த நிலையில், மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு (CCDB) முன்னெடுத்திருந்தது.

இளைஞர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டு எரிப்பு; நால்வர் கைது | Youth From Wellampitiya Brutally Murdered

இளைஞர் கொடூரமாகப் படுகொலை

இந்த விசாரணைகளின் மூலம், 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் திகதி கிராண்ட்பாஸ், கம்பி கொடுவவத்தை பகுதியிலுள்ள வாகன பழுதுபார்க்கும் இடமொன்றில் சிலருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார் எனவும் அந்த இளைஞர் காணாமல்போனதைத் தொடர்ந்து, அவருடன் மது அருந்திய குழுவினர் அப்பகுதியை விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.

தீவிர புயலாக வலுப்பெறும் "முரசு" சூறாவளி ; மக்களே அவதானம்

தீவிர புயலாக வலுப்பெறும் "முரசு" சூறாவளி ; மக்களே அவதானம்

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், கடந்த 2026 ஒக்டோபர் 30 ஆம் திகதி மாபோல - களு பாலம் அருகில் மற்றும் மஹர பகுதியில் வைத்து இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாகன பழுதுபார்க்கும் இடத்தில் வைத்து அந்த இளைஞர் படுகொலை செய்யப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.

எரிபொருள் விலை அதிகரித்தாலும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் மாறாது!

எரிபொருள் விலை அதிகரித்தாலும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் மாறாது!

பின்னர், அவரது சடலம் கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெப்பிலியவல பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர், எஞ்சிய எலும்புத் துண்டுகள் மற்றும் ஏனைய பாகங்கள் கொஸ்கம - ரன்வல பாலத்திற்கு அருகில் களனி ஆற்றில் வீசப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் பூகொட நீதவான், வதுபிட்டிவல வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மற்றும் கம்பஹா குற்றவியல் தளப் பரிசோதனை அதிகாரிகள் முன்னிலையில் பெப்பிலியவல பகுதியில் களப் பரிசோதனை நடத்தப்பட்டது.

இதன்போது, மோட்டார் சைக்கிள் சாவியொன்று, தாயத்து, சில எலும்புத் துண்டுகள் மற்றும் எரிந்த கூடாரத் துணியின் பாகங்கள் என்பன கண்டெடுக்கப்பட்டு சான்றுப் பொருட்களாக பொறுப்பேற்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 29, 32, 37 மற்றும் 46 வயதுடைய வெல்லம்பிட்டிய மற்றும் அகலவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இந்தநிலையில், கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்கள் இன்று (2) வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவு தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US