காதல் விவகாரத்தால் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை
அம்பாறை கல்முனையில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று முன் தினம் (15) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மணல்சேனை கிட்டங்கி வீதி பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞனே தூக்கில் தொங்கிய நிலையில் பொலிஸாரினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காதல் விவகாரமே தற்கொலைக்கு காரணம்
காதல் விவகாரமே இளைஞனின் தற்கொலைக்கு காரணம் என ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. இளைஞனின் சடலம் மீட்கப்பட்டு கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சம்பவம் தொடர்பில் கல்முனை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர் தொலைபேசி ஊடாக வெளிநாடு ஒன்றிலுள்ள யுவதி ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்த நிலையில் தாயார் வீட்டில் இல்லாத நேரம் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.