வெளிநாட்டு தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டம் குறித்து ஜனாதிபதியின் புதிய அறிவுறுத்தல்கள்

Anura Kumara Dissanayaka Tourism Foreign Employment Bureau
By Sahana Jul 16, 2026 05:51 PM GMT
Report

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை ஊழியர்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் காணப்படும் சிக்கல்களை விரைவாகத் தீர்த்து, அதனை எதிர்வரும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கொழும்பு புறநகர் பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு

கொழும்பு புறநகர் பகுதியில் சற்றுமுன் துப்பாக்கிச் சூடு

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சுக்களுக்கு 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வு மற்றும் 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னதான கலந்துரையாடல் நேற்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

வெளிநாட்டு தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டம் குறித்து ஜனாதிபதியின் புதிய அறிவுறுத்தல்கள் | President S Instructions Pension Foreign Workers

இந்தக் கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி குறித்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய துறைகளில் ஒன்றாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறை விளங்குவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்கால பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முறையான ஓய்வூதியத் திட்டமொன்று அவசியம் எனத் தெரிவித்தார்.

அத்துடன், குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தாமதமின்றி முன்னெடுக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இதன்போது, சுற்றுலாத்துறை தொடர்பான திட்டங்களை மாவட்ட மட்டத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்காக, அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளை மாவட்ட செயலாளர்களுக்கு நேரடியாக வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இதன் மூலம் மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் மற்றும் சுற்றுலா குழுக்களின் ஒருங்கிணைப்புடன் திட்டங்களை விரைவாக முன்னெடுக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், சிகிரியா, கலேவெல மற்றும் திருகோணமலை பகுதிகளை மையமாகக் கொண்டு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை சுற்றுலா அமைச்சு மற்றும் தொல்பொருள் திணைக்களத்துடன் இணைந்து செயல்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.

வெளிநாட்டு தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டம் குறித்து ஜனாதிபதியின் புதிய அறிவுறுத்தல்கள் | President S Instructions Pension Foreign Workers

ஒவ்வொரு நிறுவனமும் தனித்தனியாக செயல்படுவதற்குப் பதிலாக ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் செயற்படுவதன் மூலம் காலதாமதத்தையும் வள விரயத்தையும் குறைக்க முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது கொள்முதல் நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்திலிருந்தே கொள்முதல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கக்கூடிய வகையில் நிதி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறையை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

சுற்றுலா அமைச்சின் கீழ் காணப்படும் நிர்மாணத் துறை போன்ற தனித்துவமான கொள்முதல் தேவைகளுக்காக விசேட தலையீடுகளை மேற்கொண்டு செயல்முறைகளை விரைவுபடுத்தவும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் நடத்தப்படவுள்ள ஆசிய ஒளிபரப்பாளர்கள் மாநாடு உள்ளிட்ட திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

லிதுவேனியாவில் வேலை வாய்ப்பு; வரவேண்டாம் என எச்சரிக்கை!

லிதுவேனியாவில் வேலை வாய்ப்பு; வரவேண்டாம் என எச்சரிக்கை!

அத்துடன், தூதரக சேவைகளை மேலும் வினைத்திறனாக்குவதற்காக டிஜிட்டல் அமைச்சுடன் இணைந்து புதிய திட்டங்களை உருவாக்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் உள்ள வளங்கள் மற்றும் காணிகள் தொடர்பான முழுமையான அறிக்கைகள் கடந்த காலங்களில் முறையாகத் தயாரிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டதுடன், அதற்கான அறிக்கையை விரைவாகத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு சுமார் 8 இலட்சம் மனித வளம் தேவைப்படும் எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைய, ஹோட்டல் பாடசாலைகள் ஊடாக வழங்கப்படும் பயிற்சிப் பாடநெறிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

லிதுவேனியாவில் வேலை வாய்ப்பு; வரவேண்டாம் என எச்சரிக்கை!

லிதுவேனியாவில் வேலை வாய்ப்பு; வரவேண்டாம் என எச்சரிக்கை!

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US