தமிழர் பிரதேசத்தில் பள்ளிவாசல் பகுதியில் தகாத செயலால் பிடிபட்ட இளைஞர்
அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை ஜும்மா பள்ளிவாசல் பகுதியில் 27 கிராம் 140 மில்லிகிராம் ஐஸ் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருளுடன் 30 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (18) புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், கல்முனை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட இளைஞரைச் சோதனையிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை
இதன்போது, அவரது உடைமையிலிருந்து குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்