14 வயதுச் சிறுமிக்கு மதுபானம் கொடுத்து பாலியல் வன்கொடுமை ; 19 வயது இளைஞன் கைது
கிளிநொச்சியில் 14 வயதுச் சிறுமிக்கு மதுபானம் வழங்கி, அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வெலிக்கடை சிறையில் மூன்று மாத பச்சிளம் குழந்தை உயிரிழப்பு ; குழந்தையின் மரணம் தொடர்பில் விரிவான விசாரணை
பொலிஸில் முறைப்பாடு
கிளிநொச்சி – திருவையாறு பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமி, கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு அருகில் நின்றுகொண்டிருந்தபோது, அவரை ஏமாற்றி அழைத்துச் சென்று குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் சந்தேகநபர், கிளிநொச்சி நகரில் விசா அலுவலகம் ஒன்றை நடத்தி வருபவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுமிக்கு மதுபானம் வழங்கிய பின்னர் அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், 19 வயதுடைய குறித்த இளைஞரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமி மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
14 வயதுடைய சிறுமி ஒருவர் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.