அறையொன்றிற்குள் இளைஞனுக்கு நடத்தப்பட்ட கொடூரம் ; தீவிரமாகும் விசாரணை
வாழைத்தோட்டம், பொதுபிட்டிய பகுதியில் உள்ள தோட்ட அறையொன்றிற்குள் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு காயமடைந்த நபர் ஒருவர் பொதுபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
உயிரிழந்தவர் கட்டங்கே, கஹவத்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபராவார்.

உயிரிழந்த நபருக்கும் கொலையைச் செய்த சந்தேக நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதில் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்யப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கஹவத்தை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொதுபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.